நம்பிக்கையில்லாத் தீர்மானம்: அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஜி.கே.வாசன்

பேரவைத் தலைவருக்கு எதிராக திமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.


பேரவைத் தலைவருக்கு எதிராக திமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னையில் தமாகா சார்பில் புதன்கிழமை  மே தின விழா நடைபெற்றது. இந்த விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியது:
தமாகா எப்போதும் தொழிலாளர்கள் நலன் சார்ந்தே செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளும் அவ்வாறு செயல்பட வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.  பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மெட்ரோ ரயில் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நியாயம் உள்ளது. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். 
அதிமுகவின் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு, பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. அதற்காக அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை திமுக கொண்டு வருவது அரசியல் உள்நோக்கம் கொண்டது. நடைபெற உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெறுவர் என்றார்.
தமாகா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத் தலைவர் கோவை தங்கம், பொதுச்செயலாளர் விடியல்சேகர் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com