Enable Javscript for better performance
எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்: அதிமுகவின் உள்கட்சிப் பூசல்: கமல்ஹாசன்- Dinamani

சுடச்சுட

    

    எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்: அதிமுகவின் உள்கட்சிப் பூசல்: கமல்ஹாசன்

    By DIN  |   Published on : 04th May 2019 02:36 AM  |   அ+அ அ-   |    |  

    kamal


    அதிமுகவின் 3 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருப்பது அக் கட்சியின் உள்கட்சி பூசல் விவகாரம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
    சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கமல் கூறியது:
    உலக பத்திரிகையாளர்கள்  தினத்துக்கான வாழ்த்துகள். சிறுபத்திரிகை ஒன்றை நானும் நடத்தி வந்துள்ளேன். 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்துக்காகச் செல்கிறேன். முந்தைய பிரசாரம்போல் இதுவும் வெற்றிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.
    மக்களவைத் தேர்தலில் வெற்றிவாய்ப்பு நன்றாக இருப்பதாக எல்லோரும் கூறுகின்றனர். அதையே நானும் நம்பிக் கொண்டிருக்கிறேன். எங்கள் கட்சியின் விளம்பரங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து, அது வாக்குகளாக மாறி இருப்பதாகத்தான் சொல்கின்றனர். அது போன்ற முயற்சிகள் தொடரும். 3 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியிருப்பதை  அதிமுகவுக்குள் இருக்கும் உள்கட்சி பூசலாகத்தான் பார்க்கிறேன் என்றார்.

    kattana sevai