Enable Javscript for better performance
அமமுகவில் நாங்கள் உறுப்பினர்களாக இல்லை!: நோட்டீஸ் அனுப்பப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் பேட்டி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அமமுகவில் நாங்கள் உறுப்பினர்களாக இல்லை!: நோட்டீஸ் அனுப்பப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் பேட்டி

    By DIN  |   Published On : 04th May 2019 02:04 AM  |   Last Updated : 04th May 2019 02:04 AM  |  அ+அ அ-  |  

    rathnasababathi


    டிடிவி. தினகரன் பொதுச் செயலாளராக உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக நாங்கள் இல்லை என்று அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இருவர் விளக்கம் அளித்துள்ளனர்.
    அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. வி.டி.கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகியோர் அதிமுகவுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் அளித்திருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து மூன்று பேரிடமும் விளக்கம் கேட்டு பேரவைத் தலைவர் பி.தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் சென்னையில் கூட்டாக வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
    கொறடா ராஜேந்திரன் எங்கள் மீது சில குறைகளைச் சொல்லி நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதையடுத்து, பேரவைத் தலைவரும் நோட்டீஸ் அளித்துள்ளார். அந்த நோட்டீஸை படித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் மூன்று பேரும் கலந்து ஆலோசித்து தக்க பதிலை விரைவில் பேரவைத் தலைவரிடம் அளிக்க இருக்கிறோம். இதற்கிடையே, பேரவைத் தலைவர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ளது.
    பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் எங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.  நீதிமன்றத்தில் விவாதங்கள் நடந்து தீர்ப்பு சொல்ல உள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்து வருகிறோம். எங்களை வேட்பாளர்களாக நிறுத்தி வைத்து வெற்றி பெற வைத்தது ஜெயலலிதாதான். அதில் சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை கிடையாது.
    எனவே, இந்த கட்சி, ஆட்சியின் நலனில் எங்களை விட உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை. இதற்கு முன்பாக பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தபோது தீர்மானத்துக்கு எதிராகவே வாக்களித்தோம்.
    அமமுகவில் இல்லை: இரட்டை இலை சின்னம், அதிமுகவுக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்புக் கூறியுள்ளது. எங்களது அணியை அதிமுகவின் பிளவுபட்ட குழுதான் எனவும், அது சசிகலா தலைமையில் செயல்படுகிறது என்றும் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. அணியாகச் செயல்படவும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.  டிடிவி. தினகரன் தரப்பினர் இப்போது அமமுகவை கட்சியாகப் பதிவு செய்துள்ளனர். அதுதொடர்பான எந்த நிகழ்விலும் நாங்கள் பங்கேற்கவில்லை. அமமுக அணியாக இருந்தபோதும் கூட அதில் உறுப்பினராக இல்லை. எங்களுக்கு தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புப்படி சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. 
    ஆனாலும், இந்த ஆட்சிக்கு ஆதரவாக உறுதியாக இருக்கிறோம். ஆட்சியைத் தக்க வைக்க இரவு பகலாகப் பாடுபட்டோம். நாங்கள் இப்போது தொடர்ந்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்க தாமதம் ஏற்பட்டால் பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் கொடுப்போம். நாங்கள் சட்டப்படி செயல்பட்டு வருகிறோம் என்று இருவரும் தெரிவித்தனர்.
    நோட்டீஸ் கிடைத்தது: எம்.எல்.ஏ.க்கள் தகவல்    
    சட்டப் பேரவைச் செயலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸ் தங்களுக்கு வியாழக்கிழமை (ஏப். 2) கிடைக்கப் பெற்றதாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.
    கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, ஏ.பிரபு ஆகியோருக்கு சட்டப் பேரவைச் செயலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுகுறித்து, எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பேரவைச் செயலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸ் வியாழக்கிழமை பிற்பகலில் கிடைக்கப் பெற்றது. நோட்டீஸ் கிடைத்த நாளில் இருந்து ஏழு நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, உரிய காலத்துக்குள் பேரவைத் தலைவர் பி.தனபால் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு பதில் அளிப்போம் என்றனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp