Enable Javscript for better performance
தமிழகத்தை சீரமைக்க திமுகவை ஆதரியுங்கள்: மு.க.ஸ்டாலின்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தமிழகத்தை சீரமைக்க திமுகவை ஆதரியுங்கள்:  மு.க.ஸ்டாலின்

    By DIN  |   Published On : 04th May 2019 02:03 AM  |   Last Updated : 04th May 2019 05:08 AM  |  அ+அ அ-  |  

    stalin

    தமிழகத்தை சீரமைக்க திமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
    திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் டாக்டர் பா.சரவணனை ஆதரித்து வெள்ளிக்கிழமை  திருப்பரங்குன்றத்தில் நடைப் பயணமாகச் சென்று பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் பேசியது:
    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம்  இருப்பதாக முதலில் கூறியவர் தற்போதைய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான். தனது பதவி பறிக்கப்பட்டவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டார். அதன் பிறகு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் இதுவரை நான்கு முறை சம்மன் அனுப்பியும், ஒரு முறை கூட ஆஜராகாமல் இருப்பவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதேபோல கொடநாட்டில் ஜெயலலிதாவின் பங்களாவில் இருந்த ஆவணங்கள், பணம் திருடத் திட்டமிடப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்டதாக வழக்கு உள்ளது. மேலும், பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் சட்டப் பேரவை துணைத் தலைவர்  மகன்கள் மற்றும் கூட்டளிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே, தமிழகத்தை சீரமைக்க திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.
    வேட்பாளர் பா.சரவணன், திமுக துணை பொதுச் செயலர் ஐ.பெரியசாமி, மாநகர் பொறுப்புக்குழு தலைவர் கோ.தளபதி, தெற்கு மாவட்டச் செயலர் மு.மணிமாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp