பொன் மாணிக்கவேல் நீடிக்க வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக சிறப்பாக செயல்படும் பொன் மாணிக்கவேல் நீடிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம் என்றார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
பொன் மாணிக்கவேல் நீடிக்க வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்


சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக சிறப்பாக செயல்படும் பொன் மாணிக்கவேல் நீடிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம் என்றார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தை பொருத்தவரை அதிமுக- பாஜக கூட்டணி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். அதிமுக, பாஜக அரசுகள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். திமுக ஆட்சியில் மக்களுக்கு எதையும் செய்யாததால், ஸ்டாலின் சொல்வதை மக்கள் நம்பமாட்டார்கள்.
தூத்துக்குடி மே தின பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை மோசமாக விமர்சனம் செய்திருக்கிறார். உலகம் முழுவதும் நேர்மையான தலைவர் என பெயரெடுத்த பிரதமர் மோடியை மிக மோசமாக விமர்சனம் செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.
நாங்கள் நேர்மையான அரசியலை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல விரும்புகிறோம். மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற்றுவிடும் என ஸ்டாலின் கனவில் இருக்கிறார். திமுகவும், அமமுக-வும் கைகோத்துக்கொண்டு தமிழகத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில் சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல்  சிறப்பாக செயல்படுகிறார். அவர் நீடிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம் என்றார் அவர்.
இடைத்தேர்தல் நிலையான ஆட்சிக்கு வழிவகுக்கும்: அம்பாசமுத்திரத்தில் தமிழிசை செளந்தரராஜன் அளித்த பேட்டி: தமிழகத்தில் 4 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 4  தொகுதிகளிலும் அதிமுக வெற்றிக்கு கடுமையாக உழைப்போம். தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைவதற்கு இந்தத் தேர்தல் உதவும். சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சியை கலைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், மாநில ஆட்சி பலம் பொருந்திய ஆட்சியாக மாறும்  என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com