ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சித்திரைத் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ஸ்ரீரங்கம் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  சித்திரை திருத்தேரோட்டம்.  (உள்படம்) தேரில் எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீநம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  சித்திரை திருத்தேரோட்டம்.  (உள்படம்) தேரில் எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீநம்பெருமாள்.


ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சித்திரைத் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். முக்கிய விழாவான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. 
இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து வந்திருந்த ஆண்டாள் சூடிக் களைந்த கிளிமாலை, வஸ்திரங்கள் அணிந்து அதிகாலை புறப்பட்டு, சித்திரைத் தேர் மண்டபத்தை 5 மணிக்கு அடைந்தார். பின்னர் வேதமந்திரங்கள் முழங்க 5.45-க்கு திருத்தேரில் எழுந்தருளினார். 
தொடர்ந்து 6.15-க்கு கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ரெங்கா ரெங்கா என கோஷ மிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்த திருத்தேர்  காலை 9.45 மணிக்கு நிலையை அடைந்தது. சனிக்கிழமை சப்தாவரணம், ஞாயிற்றுக்கிழமை ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவுறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com