ஆந்திராவில் தமிழக குழந்தை தொழிலாளர்கள் சிறை வைப்பு: தப்பி வந்த கம்பம் சிறுவன் தகவல்

ஆந்திர மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள் பலரை தனியார் நிறுவனங்கள் சிறைபிடித்து வைத்து வேலை வாங்குவதாக அங்கிருந்து தப்பி வந்த கம்பம் அருகே ஆங்கூர்பாளையத்தைச் சேர்ந்த
ஆந்திராவில் தமிழக குழந்தை தொழிலாளர்கள் சிறை வைப்பு: தப்பி வந்த கம்பம் சிறுவன் தகவல்

ஆந்திர மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள் பலரை தனியார் நிறுவனங்கள் சிறைபிடித்து வைத்து வேலை வாங்குவதாக அங்கிருந்து தப்பி வந்த கம்பம் அருகே ஆங்கூர்பாளையத்தைச் சேர்ந்த சிறுவன் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்துக்கு தகவல் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே ஆங்கூர்பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் சக்திகுமார் (15). இவரின் பெற்றோர் அவரை கடந்த 2017-ம் ஆண்டு கம்பம், ரேஞ்சர் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த ராஜூ என்பவர் மூலம் உசிலம்பட்டிக்கு முறுக்கு கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பியுள்ளனர். உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவர், சக்திகுமாரை ஆந்திராவில் உள்ள முறுக்கு கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அங்கு சக்திக்குமாருக்கு சம்பளம் வழங்காமல் கடுமையான வேலைகளை கொடுத்து சித்திரவதை செய்தனராம்.

இந்நிலையில், அந்த கம்பெனியில் இருந்து தப்பி வந்த சக்திகுமார், திருப்பதி பகுதியில் பன்றிகள் வளர்க்கும் தொழில் செய்பவரிடம் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு சக்திகுமாருக்கு போதிய உணவு கொடுக்காமல் தொடர்ந்து வேலை வாங்கி கொடுமைப்படுத்தினராம். பின்னர் திருப்பதியில் இருந்து தப்பி செங்கல்பட்டுக்கு வந்த சக்திகுமார் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் பாளையம் என்பவர் மூலம் தேனி மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

சக்திகுமாரிடம் மாவட்ட குழந்தைகள் நலக் குழும சமூக பணியாளர்கள் விசாரணை நடத்தியதில், ஆந்திரா மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பல சிறுவர்களை சிறை பிடித்து வைத்து வேலை வாங்கி சித்திரவதை செய்வதாக தெரிவித்துள்ளார். சிறுவன் சக்திகுமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இது குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரனிடம் குழந்தைகள் நலக் குழு தலைவர் எஸ்.எம்.சுரேஷ், உறுப்பினர்கள் நாகேந்திரன், பழனிச்சாமி ஆகியோர் திங்கள்கிழமை புகார் மனு அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com