Enable Javscript for better performance
சி.ஆர்.சரஸ்வதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சி.ஆர்.சரஸ்வதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு

    By DIN  |   Published On : 07th May 2019 01:14 AM  |   Last Updated : 07th May 2019 01:14 AM  |  அ+அ அ-  |  

    CR-saraswathi


    உயர்நீதிமன்ற உத்தரவை விமர்சித்த விவகாரத்தில், அமமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி  அரசு தலைமை வழக்குரைஞரிடம் அதிமுக வழக்குரைஞர்கள் பிரிவு சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 
    அதிமுக வடசென்னை வழக்குரைஞர்கள் பிரிவு இணைச் செயலாளர் எம்.தட்சிணாமூர்த்தி, அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணிடம் மனு அளித்தார். அந்த மனுவில், கடந்த 1-ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில், அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 11 எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்து பேசினார். இது நீதித்துறையின் மாண்பை கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே இந்திய நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய சி.ஆர்.சரஸ்வதி மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp