பாஜக தோல்வியைச் சந்திப்பது உறுதி: வைகோ

மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்திப்பது உறுதி. காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சியமைக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பாஜக தோல்வியைச் சந்திப்பது உறுதி: வைகோ


மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்திப்பது உறுதி. காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சியமைக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுக 26-ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.  இதில் பங்கேற்ற அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மத நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும் பாஜக, இந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும். காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணி மத்தியில் ஆட்சியமைப்பது உறுதி. சில ஊடகங்களில் இன்னும் மோடி அலை வீசுவதாகக் கூறப்படுவது பொய்யான தகவல். தமிழகத்தைப் போல வட மாநிலங்களிலும் மோடி எதிர்ப்பு அலைதான் வீசுகிறது.
ஒடிஸாவை பானி புயல் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன். அந்த மாநில முதல்வர் சிறப்பான முறையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால், உயிர்ச் சேதம் வெகுவாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கஜா புயல் பாதித்தபோது, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததால் 89 பேர் உயிரிழக்க நேரிட்டது.
ஒடிஸாவில் புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டுள்ளார். ஆனால், தமிழகத்தில் கஜா புயல் பாதித்தபோது மோடி பார்வையிட வரவில்லை என்பதோடு, இரங்கல்கூட தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி தமிழக மக்களின் மனதில் எழுந்திருக்கிறது. தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்பதில் உறுதியாக இருப்பதற்கு, இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்றார் அவர்.
ஜனநாயகத்தின் வெற்றி: ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்வதற்காக பேரவைத் தலைவர் எடுத்த நடவடிக்கை தவறானது. இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி. எனவே, சட்டப்பேரவைத் தலைவர் தனது நடவடிக்கையைக் கைவிட்டு, பேரவையில் எதிர்க்கட்சி கொண்டுவந்திருக்கிற நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திப்பதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறையாக இருக்கும் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com