சுடச்சுட

    


    கல்லீரல் செயலிழந்த 3 வயது சிறுவனுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட நவீன சிகிச்சை மூலம் அவர் உயிர் பிழைத்துள்ளார்.
    இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவின் முதுநிலை ஆலோசகர் மருத்துவர் சுசித்ரா ரஞ்சித் கூறியதாவது: 
    சென்னையைச் சேர்ந்த வரதராஜின் மகன் ராதேஷ். இவருக்கு காய்ச்சல் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கல்லீரல் செயலிழந்தது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது மூளையில் வீக்கம் இருந்தது. சிறுநீர் வெளியேறுவதும் தடைப்பட்டது. 
    இதனால், உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்காக, அவருக்கு ஓ பாசிடிவ் ரத்த வகையில் சரியான கல்லீரல் கிடைக்கவேண்டும் என அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் அவர் செயற்கை சுவாசம் (வென்டிலேஷனில்) வைக்கப்பட்டு, சிறுநீரக சம்பந்தமான டயாலிசிஸ் சிகிச்சை, ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை போன்ற நவீன சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டன. இதில் அவருடைய உடல்நிலை நன்கு முன்னேற்றமடைந்தது. மேலும், ஆச்சரியப்படும் அளவுக்கு, அவருக்கு திட்டமிடப்பட்டிருந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அவசியமில்லை என்ற நிலை உருவானது. இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai