சுடச்சுட

  
  dengue

  நடப்பாண்டில்  இதுவரை 800 பேர்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
  தமிழகத்தில் கடந்த  2017 -இல்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 65 பேர் உயிரிழந்தனர். 2018 ஆம் ஆண்டில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்திருந்தாலும், பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து, 43 பேர் உயிரிழந்தனர். 
  இந்த ஆண்டும் இதுவரை, 800 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் பன்றிக் காய்ச்சலால், 381 பேர் பாதிக்கப்பட்டு, இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளை விட டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலின்  தாக்கம் குறைவாகவே உள்ளது.
  இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலைவி வருகிறது. தண்ணீர் தேவையின் காரணமாக, சுகாதாரமற்ற தண்ணீரை மக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கிடைக்கும் தண்ணீரை பல நாள்கள் சேமித்து வைக்க வேண்டிய கட்டாய சூழ் நிலை  உள்ளது. இதன் காரணமாக டெங்கு, டைஃபாய்டு, வாந்தி, பேதி, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் மக்களை அதிகளவில் தாக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 
  இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியது: 
  லாரிகளில், குளோரினேசன் அளவு சரியாக உள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், யானைக்கால், ஜப்பானிய மூளைக்காய்ச்சலை பரப்பும் சாக்கடை நீர் மற்றும் வயல் வெளிகளில் வளரக்கூடிய, கியூலக்ஸ் வகையைச் சேர்ந்த கொசுக்கள், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுகளில் உள்ள வைரஸ் கிருமிகள் ஆகியவை ஆய்வு செய்யப்படுகின்றன என்றார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai