தமிழகத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் புதன்கிழமை இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்பு


வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் புதன்கிழமை இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: 
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் புதன்கிழமை (மே 8) இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 80 டிகிரி முதல் 102 டிகிரி வரை இருக்கும் என்றனர்.
திருப்பூரில் 50 மி.மீ.மழை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 50 மி.மீ., தேனி மாவட்டம் மஞ்சலாற்றில் 40 மி.மீ. மழை பதிவானது.
திருத்தணியில் 112 டிகிரி: 
செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 112 டிகிரி வெயில் பதிவானது. சென்னை, திருச்சி, வேலூரில் தலா 107 டிகிரியும், கரூர் மாவட்டம் பரமத்தி, மதுரையில் தலா 105 டிகிரியும், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, தஞ்சாவூரில் 104 டிகிரியும்,  கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 102 டிகிரியும், கடலூர், சேலத்தில் 101 டிகிரியும், தர்மபுரி, நாமக்கல், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 100 டிகிரியும் வெயில்  பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com