4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: முதல்வரின் பிரசாரப் பயண விவரம்

 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மே 11 முதல் 14-ஆம் தேதி வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ள பிரசாரப் பயணம் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: முதல்வரின் பிரசாரப் பயண விவரம்

 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மே 11 முதல் 14-ஆம் தேதி வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ள பிரசாரப் பயணம் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மே 11: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில்  நாகமலை புதுக்கோட்டையில் மாலை 5 மணிக்குப் பிரசாரத்தைத் தொடங்கும் முதல்வர், வடபழஞ்சி, தனக்கன்குளம், ஆர்.வி.பட்டி, நிலையூர் கைத்தறி நகர் வழியாகச் சென்று, இறுதியாக திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
மே 12: ஓட்டப்பிடாரம் தொகுதியில் வசவப்புரம் பகுதியில் மாலை 5 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கும் முதல்வர் வல்லநாடு, தெய்வச்செயல்புரம், சவலாப்பேரி, ஒட்டநத்தம், ஒசநூத்து வழியாகச் சென்று குறுச்சாலையில் நிறைவு செய்கிறார்.
மே 13: அரவக்குறிச்சி தொகுதியில் சீத்தப்பட்டி காலனியில் மாலை 5 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கும் முதல்வர் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, இனங்கனூர், குரும்பப்பட்டி, ஆண்டிப்பட்டிகோட்டை வழியாக ஈசநத்தத்தில் நிறைவு செய்கிறார்.
மே 14: சூலூர் தொகுதியில் சின்னியம்பாளையத்தில் மாலை 5 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கும் முதல்வர் முத்துக்கவுண்டன்புதூர், வாகராயம்பாளையம், கிட்டாம்பாளையம் நால்ரோடு, கருமத்தம்பட்டி, சாமளாபுரம் வழியாக சூலூரில் நிறைவு செய்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com