இல்லாமியர்கள் அதிகம் உள்ள இடத்தில் ஓட்டுக்காக இப்படி பேசினீர்களா?: கமலுக்கு பிரபல பாலிவுட் நடிகர் கேள்வி 

இல்லாமியர்கள் அதிகம் உள்ள இடத்தில் ஓட்டுக்காக இப்படி பேசினீர்களா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் தேர்தல் பிரசார பேச்சு குறித்து பிரபல பாலிவுட் நடிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இல்லாமியர்கள் அதிகம் உள்ள இடத்தில் ஓட்டுக்காக இப்படி பேசினீர்களா?: கமலுக்கு பிரபல பாலிவுட் நடிகர் கேள்வி 

சென்னை: இல்லாமியர்கள் அதிகம் உள்ள இடத்தில் ஓட்டுக்காக இப்படி பேசினீர்களா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் தேர்தல் பிரசார பேச்சு குறித்து பிரபல பாலிவுட் நடிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், வரும் 19-இல் நடைபெறவுள்ளது. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

தாய் தமிழ்நாடு நோய்வாய்ப்பட்டுள்ளது. பிள்ளைகளாகிய நீங்கள் தான் அதை சரிசெய்ய வேண்டும். ஆரத்தி தட்டில் காசு போடுவதைவிட மக்களை மேம்பாடு அடையச்செய்ய வேண்டியது தான் முக்கியம்.

இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும். பயங்கரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு. பயங்கரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டார்கள். 

முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் நான் இதைச் சொல்லவில்லை. காந்தியாரின் சிலைக்கு முன்பு நின்று கொண்டு இதைச் சொல்கிறேன். ஏனென்றால் நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே.

நமது தேசியக் கொடியின் 3 வண்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன், அதை மார்தட்டிச் சொல்வேன் என்றார். 

இந்நிலையில் இல்லாமியர்கள் அதிகம் உள்ள இடத்தில் ஓட்டுக்காக இப்படி பேசினீர்களா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் தேர்தல் பிரசார பேச்சு குறித்து பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக விவேக் ஓபராய் திங்களன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது 

அன்புள்ள கமல்சார்! நீங்கள் மிகச் சிறந்த நடிகர். கலைக்கு எவ்வாறு மதங்கள் இல்லையோ , அவ்வாறே தீவிரவாதத்திற்கும் கிடையாது. நீங்கள் கோட்ஸே ஒரு தீவிரவாதி என்று கூறலாம், ஆனால் ஹிந்து என்று வலியுறுத்தி கூறுவது எதற்காக? ஒருவேளை இல்லாமியர்கள் அதிகம் உள்ள இடத்தில் ஓட்டுக்காக இப்படி பேசினீர்களா?

சிறிய நடிகனான் நான் மிகப்பெரிய நடிகரான உங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். நமது நாட்டைப் பிரிக்க வேண்டாம், நாம் அனைவரும் ஒன்று. ஜெய் ஹிந்த்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் ஓபராய் நடிகர் அஜித்குமாரின் விவேகம் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.          

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com