தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: கோதண்டராமர் சிலையைக் கொண்டு செல்வதில் சிக்கல்

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பெங்களூருக்கு கோதண்டராமர் சிலையை கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: கோதண்டராமர் சிலையைக் கொண்டு செல்வதில் சிக்கல்

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பெங்களூருக்கு கோதண்டராமர் சிலையை கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
 ஒசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியிலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட கோதண்டராமர் சிலையை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் மீது கொண்டு செல்ல அனுமதி இல்லாததால், பாலத்தின் இடதுபுறம் ஆற்றின் குறுக்கே மண்சாலை அமைத்து சிலை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டது.
 பாலத்தின் குறுக்கே தென்பெண்ணையாறு செல்வதால் ஆற்றில் தினந்தோறும் நீர்வரத்துக்கு ஏற்றார்போல் உபரி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அணைக்கு விநாடிக்கு 320 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. விநாடிக்கு 195 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிலை எடுத்து செல்ல பொதுப்பணித் துறையினரிடம் அனுமதிக் கோரி சனிக்கிழமை மட்டும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. எனினும், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மண் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
 ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அங்கு பெரிய அளவிலான குழாய்கள் பதிக்கப்பட்டு சாலைப்பணி தொடங்கப்படும். இதனால் சிலையைக் கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படும் என தெரிகிறது. கோதண்டராமர் சிலை நிறுத்தப்பட்டுள்ள பேரண்டப்பள்ளி பகுதி தற்போது சுற்றுலாத்தலமாக காட்சியளிக்கிறது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். பக்தர்களுக்கும் இலவசமாக உணவுகளை வழங்கி வருகின்றனர். சிலை அருகே பூஜைக்கு தேவையான பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com