சுடச்சுட

  

  சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்து  சென்னையில் 15- ஆம் தேதி  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
  இதுகுறித்து அக் கட்சியின் தலைவர் திருமாவளவன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
  சாதியின் பெயரால் திருவாண்டுதுறை கொல்லிமலைக்கு நேர்ந்த வன்கொடுமையைக் கண்டித்தும், காதலின் பெயரால் திலகவதி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மே 15-ஆம் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
   தலித்துகளுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகளையும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் தடுப்பதற்கு உரிய சட்டங்களை தமிழக அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த முன் வரவேண்டும். திலகவதி படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்பதோடு,  சக மனிதனின் வாயில் மனிதக் கழிவுகளைத் திணித்த சாதிவெறிப் பிடித்தவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. 
  மேலும், வன்கொடுமைக்குள்ளான கொல்லிமலையின் குடும்பத்திற்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் போதிய இழப்பீடு மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai