சரியாக படித்து விட்டு பதில் அறிக்கை கொடுங்கள்: கே.எஸ்.அழகிரியை கிண்டல் செய்த தமிழிசை 

எந்த பத்திரிக்கை அறிக்கையாக இருந்தாலும் அதை சரியாக படித்து விட்டு பதில் அறிக்கை கொடுக்க வேண்டுமென்று, மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கிண்டல் செய்துள்ளார்.
சரியாக படித்து விட்டு பதில் அறிக்கை கொடுங்கள்: கே.எஸ்.அழகிரியை கிண்டல் செய்த தமிழிசை 

சென்னை: எந்த பத்திரிக்கை அறிக்கையாக இருந்தாலும் அதை சரியாக படித்து விட்டு பதில் அறிக்கை கொடுக்க வேண்டுமென்று, மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அண்ணன் அழகிரி அவர்களின் அறிக்கையை நான் பார்த்தேன். அண்ணன் அழகிரி அவர்கள் தான் 2,3 நாட்களாக பதற்றத்தில் இருக்கிறார். அதனால் தான் சேவை இயக்கமான R.S.S-யை I.S இயக்கதோடு ஒப்பிட்டிருக்கிறார். இதை மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதுமட்டுமல்ல, நான் சொன்னது திராவிட முன்னேற்றக் கழகம் பா.ஜ.கவிடம் பேசிக்கொண்டிருக்கிறது என்று தான் சொன்னேன். மரியாதைக்குரிய பாரத பிரதமர்  மோடி ஜி- அவர்களிடம் பேசுவதாக நான் சொல்லவில்லை. அண்ணன் அழகிரி அவர்கள் எந்த பேட்டியாக இருந்தாலும், எந்த பத்திரிக்கை அறிக்கையாக இருந்தாலும் அதை சரியாக படித்து விட்டு பதில் அறிக்கை கொடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதே மாதிரி அவர் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். மம்தா பாணர்ஜி இரண்டு முறை பிரதமர் மோடி அவர்கள் பேச நினைத்த பின்பும் அவர் பேசவில்லை என்று பெருமையாக பேசியிருக்கிறார். முதலில் மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மம்தா பாணர்ஜி அவர்களிடம் மோடி அவர்கள் பேச நினைத்தது, புயலினால் தாக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக தான். தனிப்பட்ட அரசியலுக்காகவோ, தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அல்ல.

பிரதமர் மோடி அவர்கள் மம்தா பாணர்ஜியிடம் பேச நினைத்து புயல் பாதித்த பகுதிகளுக்கு உதவி செய்வதற்காக தான். ஆனால் மம்தா பாணர்ஜி சுயநலம், ஆணவத்துடன் தன் மக்களுக்காக ஒரு பிரதமர் உதவி செய்வதற்காக முயற்சித்தும் சிறிதும் நாகரிகமில்லாமல் அவரிடம் பேசுவதையே அவர் நிராகரித்தார்.

அதுமட்டுமல்ல, மம்தா பாணர்ஜி செய்வதையெல்லாம் அண்ணன் அழகிரி ஒப்புக்கொள்கிறார்கள் என்றால், முதன் முதலில் ராகுல் காந்திக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பவர் மம்தா பாணர்ஜி தான். ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிருத்துவதை கடுமையாக எதிர்க்கிறார்.

அதுமட்டுமல்ல, மம்தா பாணர்ஜி அவர்கள் கூட்டிய கூட்டத்திற்கு சென்ற ஸ்டாலின் அங்கு ராகுலை பிரதமராக முன்னிருத்தவில்லை. அங்கே சென்று அமைதியாக வந்துவிட்டார். ஏனென்றால், அந்த கூட்டத்தில் ராகுலை முன்னிருத்தினால் மம்தா ஒப்புக்கொள்ள மாட்டார்.

ஆக, இப்படிபட்ட சூழ்நிலையெல்லாம் வைத்துக்கொண்டு அழகிரி இப்படி பேசுவதென்பது உண்மையிலேயே எனக்கு வியப்பாக இருக்கிறது. அதுமட்டுமல்ல கமலஹாசனை ஆதரித்து பேசிகிறார். கமலஹாசன் சொன்ன வார்த்தைகள் மிக கடுமையான வார்த்தைகள். இந்த நாட்டில் பிரித்தாலும் ஒரு அரசியலை முன்னெடுத்து செல்வது அபாயகரமானது. மக்களிடையே பிரவினை உண்டாக்கும். ஆனால் அழகிரி இதுபோன்ற பிரிவினைவாதிகளுக்கு தான் ஆதரவு தருகிறார்.

ஏனென்றால், சுதந்திர இந்தியாவில்,  சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து, அனைவரையும் பிரித்து அரசியல் செய்வது அவர்களுடைய முழு நேர வேலை. பிரித்தாலும் அரசியலில் மட்டும் தான் அவர்கள் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருந்தார்கள். ஆனால், அதை இன்று மக்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  இன்னும் சொல்லப்போனால், அழகிரி சொல்வது போல நாங்கள் எல்லோரும் சோர்வாக இல்லை.

நாங்கள் எல்லோரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். சோர்வு வேண்டுமென்றால், அழகிரிக்கு வரலாம் என்பதை சொல்லி உண்மைகளை திருத்திக்கூற வேண்டாமென்பதும், எந்த பதில் அறிக்கை இருந்தாலும் முதலில் பேட்டிகளையும், அறிக்கைகளையும் சரியாக படித்து விட்டு பதில் அறிக்கை கொடுக்க வேண்டுமென்றும் நான் தமிழக காங்கிரஸ் தலைவரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com