வாகன விபத்து வழக்கு: இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

உதகை செல்லும் வழியில் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு


உதகை செல்லும் வழியில் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
கடந்த 2010-ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ரகு, கணேசன் உள்ளிட்ட 4 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். 
அப்போது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் ரகு, கணேசன் ஆகியோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை காப்பீடு செய்யப்பட்டுள்ள காப்பீட்டு 
நிறுவனத்திடமிருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி ரகு, கணேசன் சார்பில் மோட்டார் 
வாகன வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், கணேசனுக்கு ரூ.1 லட்சத்து 17 ஆயிரமும், ரகுவுக்கு ரூ. 87 ஆயிரத்து 750 -ம் இழப்பீடாக வழங்க காப்பீட்டு 
நிறுவனத்துக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிடக் கோரி கணேசன், ரகு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் அமர்ந்து பயணிப்பது விதிகளுக்கு முரணானது. ஆனால் 3 பேர் பயணம் செய்தாலும் போலீஸார் அவர்களை கண்டுகொள்வதில்லை. இந்த வழக்கைப் பொருத்தவரை ஒரு இரு சக்கர வாகனத்தில் 4 பேர் பயணித்துள்ளனர். இதனால் வாகனத்தை ஓட்டியவருக்கு ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டியவருக்கும் சரிபாதி பங்கு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே தீர்ப்பாயம் இழப்பீடுத் தொகையை நிர்ணயித்து தீர்ப்பளித்துள்ளது. 
எனவே இந்த வழக்கில் தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக  நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com