விலங்குகளின் தாகம் தணிக்க வனக் குட்டைகளில் நீர் நிரப்பும் பணி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய செயற்கை வனக்குட்டைகளில் லாரிகள் மூலம் நீர் நிரப்பப்படுகிறது.
விலங்குகளின் தாகம் தணிக்க வனக் குட்டைகளில் நீர் நிரப்பும் பணி


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய செயற்கை வனக்குட்டைகளில் லாரிகள் மூலம் நீர் நிரப்பப்படுகிறது.
இந்த புலிகள் காப்பகத்தில் 10 வனச் சரகங்கள் உள்ளன. யானைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் தாண்டிய நிலையில் கோடை காலமான தற்போது தீவனம் மற்றும் குடிநீர் தேடி யானைகள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.  தற்போது யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய வனக் கோட்டங்களில் 4 புதிய செயற்கை குட்டைகள் அமைக்கப்பட்டு அதில் லாரி மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது. 
வனக் குட்டைகளில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் மிகவும் ஆழத்துக்குச் சென்றுவிட்டது. இதனால் வாடகை லாரிகளில் 8 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டு  வனக் குட்டைகளில் நிரப்பட்டு வருகிறது. தண்ணீர் அருகே குடற்புழு நோயைக் கட்டுப்படுத்தும் உப்புக்கட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. செயற்கை குட்டைகளில் உள்ள நீர் இரு நாள்களுக்கு போதுமானதாக உள்ளது.  ஆங்காங்கே செயற்கை குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதால் யானைகள், காட்டெருமைகள், மான்கள் தண்ணீர் தேடி  வனத்தையொட்டியுள்ள கிராமத்துக்கு நுழையும் சம்பவங்கள் குறைந்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com