சுடச்சுட

    

    அரசுத் துறைகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி

    By DIN  |   Published on : 15th May 2019 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    அரசுத் துறைகளில் பதவி உயர்வு உள்ளிட்ட அம்சங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
    இதுகுறித்து, தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
    அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்காக வரும் 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை எழுத்துத் தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வுகளுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜூன் 8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை இந்தத் தேர்வுகள் 33 மையங்களில் நடத்தப்படும். இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai