மோடியிடம் மம்தாவே பேசாதபோது, ஸ்டாலினா பேசுவார்?: கே.எஸ்.அழகிரி கேள்வி

பிரதமர் மோடியிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே பேசாதபோது திமுக தலைவர் ஸ்டாலினா பேசுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடியிடம் மம்தாவே பேசாதபோது, ஸ்டாலினா பேசுவார்?: கே.எஸ்.அழகிரி கேள்வி


பிரதமர் மோடியிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே பேசாதபோது திமுக தலைவர் ஸ்டாலினா பேசுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கடந்த இரண்டு தினங்களாக மிகவும் மனச் சோர்வுடன் காணப்படுகிறார். தமிழகத்தில் இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு முழுமையாக அவருக்கு இல்லை என்பது தெரிந்தவுடன் எங்களை மிகவும் கடுமையாகச் சாடுகிறார். இருந்தாலும், ஒரு சகோதரியின் விமர்சனமாகவே நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம்.
 பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் கூட்டணி பற்றி பேசியதாகக் கூறியிருக்கிறார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்  என்பது போல, தமிழிசை மிகுந்த அச்சத்துடன் காணப்படுகிறார். மம்தா பானர்ஜியிடம் இரண்டு முறை பேசுவதற்காக மோடி முயற்சி செய்தார். 
ஆனால், இரண்டு முறையுமே மம்தா பானர்ஜி மோடியிடம் பேச விரும்பவில்லை. அதற்கு அவர் சொன்ன விளக்கம் 23-ஆம் தேதிக்குப் பிறகு புதிய பிரதமர் வருகிறார், அவருடன் பேசிக் கொள்கிறேன் என்று மம்தா கூறிவிட்டார்.  எனவே, மம்தா பானர்ஜியே மோடியிடம் பேச விரும்பாத போது,  மோடியிடம் ஸ்டாலின் என்ன பேசப் போகிறார். இப்படியெல்லாம் மோடிக்கு ஒரு பெருமையைச் சேர்க்க தமிழிசை முயற்சிக்க வேண்டாம். கமல்ஹாசன் கோட்சேவைப் பற்றி சொன்னதற்காக அதிமுக அமைச்சர் ஒருவர் துள்ளிக் குதிக்கிறார். கமலுடைய நாக்கை அறுத்து விடுவேன் என்று சொல்கிறார். இதை விட ஒரு வன்முறை இருக்க முடியாது. நீதிமன்றம் தாமாகவே முன்வந்து அவர் மீது ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரிக்கலாம். கோட்சே ஒரு கொலைகாரர் மற்றும் தீவிரவாதி என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com