வாக்கு எண்ணிக்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் பாலாஜி அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் பேசிய கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி (நடுவில்). 
சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் பேசிய கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி (நடுவில்). 


மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் பாலாஜி அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. இதில், பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவிகள் அந்தந்த தொகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 5 விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளை எண்ண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயிற்சி: மக்களவை பொதுத் தேர்தல், சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ஆம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில்,  அப்பணியில் ஈடுபடும் வாக்கு எண்ணிக்கை மைய பொறுப்பாளர்கள், தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இந்தப் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்த கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜி பேசுகையில், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். தவறுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையின்போது, கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளை எண்ணும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 
இந்தப் பயிற்சியில், தமிழகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை பொறுப்பாளர்கள், தேர்தல் பணியாளர்கள் கலந்துகொண்டனர். 
இணைத் தேர்தல் அதிகாரி ஜேக்கப், பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர் கோவிந்தராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com