தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்துக்கு புதிய ஐ.ஜி. நியமனம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும புதிய ஐ.ஜி.யாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை புதன்கிழமை பிறப்பித்துள்ளது.



தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும புதிய ஐ.ஜி.யாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை புதன்கிழமை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் நடத்தப்பட்ட விரல்ரேகைப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தேர்வாணையம் சார்பில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த அறிக்கை போலி அறிக்கை என்றும், அறிக்கை தயாரித்தவர் ஐ.ஐ.டி. பேராசிரியரே இல்லை என்றும் நீதிமன்றத்துக்கு தெரியவந்தது. 
இது குறித்து வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க, சென்னை காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் சென்னை போலீஸார், வழக்குப் பதிவு செய்து, போலி அறிக்கை அளித்ததாக இருவரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும  ஐ.ஜி. என்.கே.செந்தாமரைக்கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் ஐ.ஜி.யாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com