Enable Javscript for better performance
கமல்ஹாசனுக்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் 2-ஆம் தேதி விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    கமல்ஹாசனுக்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் 2-ஆம் தேதி விசாரணை

    By DIN  |   Published on : 17th May 2019 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kamal


    நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு எதிரான மனுவை தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த மனு மீது ஆகஸ்ட் 2-இல் விசாரணை நடைபெறவுள்ளது. 
    கமல்ஹாசனுக்கு எதிராக நடவடிக்கை கோரி ஹிந்து சேனை நிறுவன உறுப்பினர் விஷ்ணு குப்தா, அந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். 
    அதில், தமிழகத்தின் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே, சுதந்திர இந்தியாவின் முதல் ஹிந்து தீவிரவாதி எனக் குறிப்பிட்டுள்ளார். 
    தேர்தல் லாபத்துக்காக சிறுபான்மையினர் இருந்த பகுதியில் இதுபோன்று மத ரீதியிலான பிரசாரத்தை கமல்ஹாசன் செய்துள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தவறான  செயல்பாடாகும். மேலும், இரு மதத்தினரிடையே பிரிவினையை உருவாக்க கமல்ஹாசன் திட்டமிட்டு முயற்சி செய்கிறார். 
    எனவே, கமல்ஹாசனின் இத்தகைய பேச்சு இந்திய தண்டணையியல் சட்டம் 1860, பிரிவு-153 (ஏ), 295 (ஏ) ஆகியவற்றின் படி அபராதத்துடன் அதிகபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனைக்குரிய குற்றமாகும். 
    எனவே, இந்த மனுவை ஏற்று, மேற்கண்ட பிரிவுகளின் கீழ் கமல்ஹாசனை விசாரித்து உரிய தண்டனை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 
    இந்நிலையில், இந்த மனு தில்லி பாட்டியாலா ஹவுஸ் பெருநகர நீதிமன்ற நீதிபதி சுமித் ஆனந்த் அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் விஷ்ணு குப்தா சார்பில் அவரது வழக்குரைஞர் சசி ரஞ்சன் குமார் சிங் ஆஜரானார்.
    அப்போது  புகார் தொடர்பான முகாந்திரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் புகார் மனு முழுமையாக இல்லை என்றும் தெரிவித்தார். எனினும், மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரர் விஷ்ணு குப்தாவின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் வகையில், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai