சுடச்சுட

  

  சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு ஏன் கமல்ஹாசனை அழைக்கவில்லை? கேஎஸ் அழகிரி விளக்கம்

  By DIN  |   Published on : 17th May 2019 10:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  alagiri

  சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு ஏன் கமல்ஹாசனை அழைக்கவில்லை? என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி விளக்கமளித்துள்ளார். 

  மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக பிற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, பாஜக கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளுடன் இது தொடர்பாக ரகசியப் பேச்சு நடத்தி வருகிறார். 

  மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகும் 23-ஆம் தேதி அன்றே, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை தில்லியில் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக ஏற்கெனவே செய்தி வெளியானது. இந்நிலையில், அக்கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளதை அக்கட்சி வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் மே 23-இல் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சித் தலைவர்களின் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்த இருப்பது உறுதியாகிவிட்டது.

  இக்கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அழைக்காதது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினார். அதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற போகிறவர்களை தான் காங்கிரஸ் எதிர்க்கட்சி கூட்டத்திற்கு அழைத்திருக்கிறார்கள், அதனால் தான் கமலை அழைக்கவில்லை. கமல் கருத்துக்கு மாற்றுக்கருத்து தெரிவிக்கலாம், வன்முறையில் ஈடுபடக்கூடாது, அதை காங்கிரஸ் அனுமதிக்காது.

  அதிமுகவை பொருத்தவரை விதி மீறல்களில் ஈடுபடுவது ஆச்சர்யம் அல்ல, அதுதான் வாடிக்கை. இவ்வாறு அவர் கூறினார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai