Enable Javscript for better performance
ரயிலில் திருடி மலேசியாவில் ஓட்டல் வாங்கிய பலே கொள்ளையன் சிக்கினான்- Dinamani

சுடச்சுட

    

    ரயிலில் திருடி மலேசியாவில் ஓட்டல் வாங்கிய பலே கொள்ளையன் சிக்கினான்

    By DIN  |   Published on : 17th May 2019 12:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pollachi drugs students arrested


    சென்னை: கடந்த 4 ஆண்டுகளாக ரயிலில் திருடி வந்த கொள்ளையன், மேலேசியாவில் ஓட்டல் வாங்கியிருப்பதாக ரயில்வே டிஐஜி தெரிவித்துள்ளார்.

    என்னதான் பலே கொள்ளையனாக இருந்தாலும், ஒரு நாள் அகப்பட்டுத்தானே ஆக வேண்டும். ஆம் அகப்பட்டான் கேரளாவைச் சேர்ந்த சாகுல் ஹமீது.

    ரயிலில் கொள்ளையடித்து வந்த கொள்ளையன் குறித்து சென்னையில் இன்று ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ரயிலில் தொடர்ந்து கொள்ளையடித்து வந்த கொள்ளையன் பிடிபட்டுள்ளான். அவன் ரயிலில் திருடி, 11 வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றதுடன் மலேசியாவில் சொந்தமாக ஒரு ஓட்டலை வாங்கி நிர்வகித்து வருகிறான்.

    ரயில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த திரிச்சூரைச் சேர்ந்த சாகுல் ஹமீதுவிடம் இருந்து 110 சவரன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சாகுல் ஹமீது கடந்த 4 ஆண்டுகளாக ரயிலில் திருடி வந்ததாகவும், ரயில்வே டிஐஜி பாலகிருண்ண் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவன் ரயிலில் முதல் வகுப்பில் டிக்கெட் பதிவு செய்து அதில் பயணிப்பான். உடன் பயணிக்கும் பயணிகளுடன் கனிவாகப் பேசி நட்புப் பாராட்டி, இரவில் அவர்கள் உறங்கும் போது அவர்களது உடைமைகள், நகைகளைக் கொள்ளையடிப்பதை தொழிலாகச் செய்து வந்துள்ளான். தமிழ்நாடு - கேரளா செல்லும் ரயில்களை குறிவைத்து சாகுல் ஹமீது திருடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    எனவே, ரயில் பயணிகள் ரயிலில் பயணிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai