Enable Javscript for better performance
வனத் துறை உயரதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    


    தமிழக வனத் துறையின் கூடுதல் தலைமை முதன்மை வனப் பாதுகாவலர்கள் 4 பேர் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.
    இதுகுறித்து வனத் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:
     கோவை சரக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த ஏ.உதயன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, வன உயிரின கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 
    சென்னை தலைமையகத்தில் செயல்திட்டப் பிரிவில் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த சுப்ராத் மஹபத்ரா, மதுரை சரக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 
    சென்னை தலைமையகத்தில் புலிகள் திட்ட கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த ஏ.வெங்கடேஷ் தர்மபுரி சரக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    கோவையில் உள்ள வனத் துறை அகாதெமியில் பணியாற்றி வந்த  கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தெபாஸிஸ் ஜனா, கோவை சரக  கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தங்கள் பொறுப்புகளை விரைவில் ஏற்றுக் கொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai