இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது 

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் வெள்ளி மாலை ஆறு மணியோடு பிரசாரம் ஓய்ந்தது
இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது 

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் வெள்ளி மாலை ஆறு மணியோடு பிரசாரம் ஓய்ந்தது

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வருகிற 19-ந்தேதியன்று, மக்களவைக்கான ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவுடன் சேர்ந்து நடக்கிறது.

அதற்காக நான்கு தொகுதிகளிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பல்வேறு அமைச்சர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் நான்கு தொகுதிகளிலும் அனல் பறந்த பிரசாரம் வெள்ளி மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து தொகுதியயில் தங்கியிருந்த வெளியூரைச் சார்ந்தவர்கள் வெளியுறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

இந்த  நான்கு தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவானது 19-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com