தமிழகத்தில் சூலூர் உட்பட ஒரு சில பகுதிகளில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் சூலூர் உட்பட ஒரு சில பகுதிகளில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை


தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

நான்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி இந்த தொகுதிகளில் மே 17 முதல் 19 ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடைத் தேர்தலுடன் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகள் அடங்கிய பகுதிகளிலும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும் மே 23 ஆம் தேதியும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகவே, இடைத்தேர்தல் வாக்குப் பதிவையொட்டி கோவை மாவட்டத்தில் சூலூர் தொகுதியிலும், கரூர் மாவட்டத்தில் அடங்கிய அரவக்குறிச்சி தொகுதியிலும், மதுரை மாவட்டத்தில் அடங்கிய திருப்பரங்குன்றம் தொகுதியிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் தொகுதியிலும் மே 17ம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட விடுமுறை நாள்களில் மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com