வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: மே 19 மாலை வரை வெளியிடத் தடை

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை, வரும் 19-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதுகுறித்த அறிவுறுத்தலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: மே 19 மாலை வரை வெளியிடத் தடை


வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை, வரும் 19-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதுகுறித்த அறிவுறுத்தலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார். 
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில், தமிழகத்தில் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வரும் 19-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை அச்சு ஊடகங்களிலோ, காட்சி ஊடகங்களிலோ வெளியிடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவுக்கு வருகிறது.
இதன்பின்பு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து சத்யபிரத சாகு வெளியிட்ட மற்றொரு செய்தி: 
தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பிறகு தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. எந்தவொரு ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு பிரசாரங்களைக் கொண்டு செல்லக் கூடாது. இசை நிகழ்ச்சி உள்பட எந்தவொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் பிரசாரத்தை மையப்படுத்தி மேற்கொள்ளக் கூடாது.
தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை மாலை 6  மணிக்குப் பிறகு அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாள்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறிய வேண்டும். இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தற்காலிக பிரசாரம் அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று அந்த செய்தியில் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com