
அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்ய இடைத்தேர்தல் வேட்பாளர் மோகன்ராஜ் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (சனிக்கிழமை) இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில், அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் மோகன்ராஜ் அலுவலகத்தில் பறக்கும் படையினர் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். அவரது அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக நிறைய பணம் பதுக்கி வைத்திருப்பதாக கரூர் பறக்கும் படை அலுவலரும், கரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருமான மனோகரனுக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதன் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த சோதனையில் மோகன்ராஜ் அலுவலகத்தில் எதுவும் சிக்கவில்லை.