
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத் தகவலில்,
வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பச்சலணம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அனல்காற்று வீசும்.
அதிகபட்சமாக பெரியநாயக்கன்பாளையம், செங்கோட்டையில் தலா 4 செ.மீ., பேச்சுப்பாறை, பரமக்குடியில் தலா 3 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையில் சில இடங்களில் மழை பெய்யலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.