
காங்கிரஸ் கட்சி அழிவை நோக்கி செல்லும் பெருங்காய டப்பா என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் விமர்சித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
தமிழகத்தை பொருத்தவரை கருத்துக்கணிப்புகள் மாறக்கூடிய வாய்ப்புள்ளது. தமிழக கருத்துக்கணிப்பில் திமுக பெருமைப்பட ஒன்றும் இல்லை. மத்தியில் பாஜக ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்புகளில் தெளிவாக தெரியவந்துள்ளது.
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் என்ற பெருங்காய டப்பாவுடன் மற்ற கட்சிகள் இணைவது சாத்தியமில்லாதது.
தேர்தல் கருத்துக்கணிப்புகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது, தமிழகத்தில் பாஜகவுக்கு 50 சதவீத வெற்றி வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.