Enable Javscript for better performance
மோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம்; வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம்: சொல்லியிருப்பவர்?- Dinamani

சுடச்சுட

    

    மோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம்; வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம்: சொல்லியிருப்பவர்?

    By DIN  |   Published on : 20th May 2019 01:04 PM  |   அ+அ அ-   |    |  

    vote counting


    மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாக வந்திருக்கும் நிலையில், மோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம்; வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என்று அரசியல் கட்சித் தலைவர் தனது தொண்டர்களுக்கு அறிக்கை வாயிலாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தேர்தலுக்கு முன்பாக ஊடகங்களை வளைத்து, தங்களுக்கு சாதகமாக கருத்துக் கணிப்புகளை வெளியிடச் செய்தவர்களே இப்போது அடுத்த காரியத்தையும் கூசாமல் செய்திருக்கிறார்கள்.

    எவ்வளவோ அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்தும், வெற்றிக்கு வாய்ப்பில்லை என்பது புரிந்ததும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அடுத்த புரட்டை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். 

    இது மோசடியான கருத்துக் கணிப்பு என்பதற்கு ஒரு உதாரணம்.. ஒரு தமிழ் தொலைக்காட்சி, காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தினோம் என்று வெளியிட்டது. அதில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு அதிகபட்சம் ஆறு சதவிகிதம் வாக்களித்ததாக மக்கள் சொன்னார்கள் என்று சொல்லப்பட்டது. நிஜம் என்ன தெரியுமா? அந்தக் கட்சி, அந்தத் தொகுதியில் போட்டியிடவே இல்லை. வாக்கு இயந்திரத்தில் இல்லாத ஒரு பட்டனை அழுத்தி எப்படி மக்கள் வாக்களித்திருப்பார்கள்?  என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாக வந்திருக்கும் நிலையில், மோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம்; வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என்று வலியுறுத்தியுள்ளார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp