Enable Javscript for better performance
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம்: முதல்வர்- Dinamani

சுடச்சுட

    

    ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம்: முதல்வர் 

    By DIN  |   Published on : 20th May 2019 07:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    eps

     

    சேலம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதியன்று முடிவு செய்து தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

    ஆனால் பரிந்துரைக்கப்பட்டு 6 மாத காலத்துக்கு மேலாகியும் ஆளுநர் அந்தப் பரிந்துரை மீது இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.

    இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    திங்களன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் இதுதொடர்பாக கேட்கப்பட்ட போது கூறியதாவது:

    இந்த விவகாரத்தில் பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவே அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றயது. அந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். அதற்காகவே தீர்மானம்  நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai