தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய சீருடை அறிமுகம்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள புதிய சீருடை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. 
தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய சீருடை அறிமுகம்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள புதிய சீருடை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. 
தமிழகத்தில் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடை வண்ணங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கரும்பச்சை நிறத்தில் அரைக்கால் சட்டையும், இளம்பச்சை நிறத்தில் கோடிட்ட மேல் சட்டையும் அணிய வேண்டும் என்றும்,  ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பழுப்பு நிறத்தாலான முழுக்கால் சட்டையும், அதே நிறத்தாலான கோடிட்ட மேல்சட்டையும் அணிய வேண்டும் என்றும்,  மாணவிகள் கூடுதலாக பழுப்பு நிறத்தாலான கோடிட்ட மேல் சட்டையும் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 
இந்த நிலையில், புதிய சீருடைகளை மாணவ, மாணவிகள் வாங்கிக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தற்போது அறிவுறுத்தியுள்ளது.  ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் இலவச சீருடையில் எந்த மாற்றமும் இல்லை.  இந்தப் புதிய சீருடைகள் குறித்த சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அனுப்பியுள்ளது. சத்துணவு சாப்பிடும் 40 லட்சத்து 66 ஆயிரத்து 217 மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டு இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளன. 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு ஏற்கெனவே சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com