Enable Javscript for better performance
இடைத்தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் தமிழகம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இடைத்தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் தமிழகம்

    By DIN  |   Published On : 23rd May 2019 01:37 AM  |   Last Updated : 23rd May 2019 01:37 AM  |  அ+அ அ-  |  

    vote


    அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளுக்காக தமிழக அரசியல் கட்சிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.
    வேலூர் தவிர்த்து 38 மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது.
    கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெருந்தலைவர்கள் இல்லாத இந்தத் தேர்தல் பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அதிமுகவின் அணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்று தேர்தலைச் சந்தித்துள்ளன.
    மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவது என்பதையும்விட, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் அதிமுக இருக்கிறது.
    ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதுவும் அதிமுகவுக்குச் சாதகமாக வரவில்லை.
    எனினும், அதிமுக நம்பிக்கையுடன் இருந்து வருகிறது. கருத்துக் கணிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது நானே கூட தோற்பேன் என்றுதான் கருத்துக் கணிப்புகள் வந்தன. ஆனால், அதிக வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி அதிமுக வெற்றிபெறும் என்று கூறியுள்ளார்.
    திமுகவின் கனவு: திமுக அணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே ஆகிய கட்சிகள் இடம்பெற்று தேர்தலைச் சந்தித்துள்ளன.
    22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றால், திமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வந்துவிடலாம் என்ற கனவுடன் இந்தத் தேர்தலை அவர்கள் சந்தித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக் கணிப்புகளும் திமுகவுக்குச் சாதகமாகவே வந்துள்ளன.
    ஆனாலும், அதை ரசிக்க முடியாத நிலையில் திமுக இருந்து வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று கருத்துக் கணிப்புகள் வந்துள்ள நிலையில், மத்தியில் மீண்டும் பாஜகவின் ஆட்சிதான் வரும் என்று கணிப்புகள் வந்துள்ளன. 
    அதனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால், திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாத சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. அதன் காரணமாகவே, கருத்துக் கணிப்புகள் சாதகமாகவோ, பாதகமாகவோ வந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    மேலும், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்துவிட்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் அதன் பக்கம் சாய வேண்டியிருக்குமோ என்ற தயக்கமும் உள்ளது.
    அமமுக காத்திருப்பு: மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிபெறுவோம் என்று அமமுகவினர் அறிவித்து தேர்தலைச் சந்தித்துள்ளனர். 
    எனினும், இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது என்பதைவிட, அதிமுக வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதே அமமுகவின் எண்ணமாக இருந்து வருகிறது.
    மேலும், வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தங்கள் பலத்தை நிரூபித்து, அதிமுகவினரை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகின்றனர்.
    மக்கள் நீதி மய்யத்தின் துவக்கம்: மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஏதேனும் ஓரிரு தொகுதிகளிலேனும் வெற்றிபெற வேண்டும் அல்லது 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதத்துக்குள் வாக்குகள் பெற வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. 
    கருத்துக் கணிப்புகளில் மக்கள் நீதி மய்யம் குறிப்பிட்ட சதவீதம் வாக்குகள் பெறும் என்று வருவதால் அந்தக் கட்சியினர் மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர்.  
    மக்கள் நீதி மய்யம் போல நாம் தமிழர் கட்சியும் ஏதேனும் ஓரிரு தொகுதியில் வெற்றிபெற வேண்டும், வாக்குச் சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்றே காத்திருக்கின்றனர்.
    மக்கள் யார் பக்கம் என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வியாழக்கிழமை (மே 23) மாலைக்குள் தெரிந்துவிடும்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp