
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி 31 மக்களவைத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 2 மக்களவைத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. அதில், சிதம்பரம் மக்களவை தொகுதியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
அங்கு அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலையில் உள்ளார்.