இந்த வெற்றியிலும் எனக்கு ஒரே ஒரு கவலைதான்: எதைச் சொல்கிறார் ஸ்டாலின்? 

ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருந்தும் தலைவர் கலைஞர் இருந்து இதனை பார்க்கவில்லையே என்ற கவலைதான் என்னை வாட்டுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
இந்த வெற்றியிலும் எனக்கு ஒரே ஒரு கவலைதான்: எதைச் சொல்கிறார் ஸ்டாலின்? 

சென்னை: ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருந்தும் தலைவர் கலைஞர் இருந்து இதனை பார்க்கவில்லையே என்ற கவலைதான் என்னை வாட்டுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தேர்தல் முடிவுகளையொட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழனன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளிவந்திருக்கின்றது. ஆகப்பெரிய வெற்றியை, நாம் என்ன எதிர்பார்த்தோமோ அந்த வெற்றியை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய வாக்காளர்களுக்கும்,  மக்களுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமில்லாமல், சட்டமன்றத்தின் இடைத்தேர்தலிலும் சிறப்பானதொரு வெற்றியை தேடித் தந்திருக்கக்கூடிய, அத்தனை பேருக்கும் நான் நன்றியை கூறிக் கொள்கின்றேன்.

அதேபோல் நம்மோடு தோழமை கண்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற அணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இந்த வெற்றிக்கு அரும்பாடு பட்டிருக்கக்கூடிய நம்முடைய கூட்டணி கட்சியின் தலைவர்களுக்கும், கூட்டணிக் கட்சியில் இடம்பெற்றிருக்கக்கூடிய செயல்வீரர்கள் அத்துனை பேருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த வெற்றியைப் பற்றி நான் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நாம் களத்தில் இறங்குகின்ற நேரத்திலேயே ஒரு உறுதி எடுத்துக் கொண்டோம். என்ன உறுதி என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாமல் நடைபெறுகின்ற தேர்தல் இந்தத் தேர்தல். எனவே, எப்படி இந்த தேர்தல் களத்தில் இறங்கப் போகின்றோம், எப்படி இந்தக் களத்தை சந்திக்கப் போகின்றோம் என்று தலைவர் கலைஞர் அவர்கள் இருந்திருந்தால் என்னென்ன பயிற்சியை, என்னென்ன தேர்தல் பணி முறைகளை நமக்கு கற்றுத் தந்திருப்பாரோ, அவற்றையெல்லாம் நாம் ஏற்கனவே அவரிடத்தில் இருந்து கற்றுக் கொண்ட காரணத்தினால், அவர் வழியில் நாம் பாடுபட்டு - பணியாற்றி இருக்கின்றோம். அது மட்டுமல்ல இந்த வெற்றியை அவருடைய நினைவிடத்திற்கு சென்று அவருக்கு நாம் வெற்றி மாலையை சமர்பிப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டிருந்தோம்.

தேர்தல் முடிவுகள் முடிவடைவதற்கு இன்னும் நேரம் ஆகும் ஒரு சூழ்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் போய்க் கொண்டிருக்கின்றது. எனவே, ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கின்றோம். ஒரே ஒரு கவலை, தலைவர் கலைஞர் அவர்கள் இருந்து இதனை பார்க்கவில்லையே என்ற அந்தக் கவலை தான் என்னை ஆட்டிக் கொண்டிருக்கின்றது.

இருந்தாலும் தலைவர் கலைஞர் அவர்களின் சிலைக்கு முன்னாலும், அவரை உருவாக்கிய அறிஞர் அண்ணாவின் சிலைக்கு முன்னாலும், வெற்றி பெற்றிருக்கக்கூடிய நம்முடைய வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதே நேரத்தில் இந்த வெற்றிக்காக பாடுபட்டிருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com