திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

17-வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து


17-வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி சுமார் 350 இடங்கள் வரை வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் திமுக கூட்டணியே புதுச்சேரி உட்பட மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகள் முன்னிலை பெற்று வருகிறது.

அதேபோல், தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக 13 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இது ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. 

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறுகையில்,    

"பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com