ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் எழுந்து நிற்போம்: டிடிவி தினகரன்

தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் எழுந்து நிற்போம் என்று டிடிவி தினகரன் டிவீட் செய்துள்ளார். 
ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் எழுந்து நிற்போம்: டிடிவி தினகரன்


தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் எழுந்து நிற்போம் என்று டிடிவி தினகரன் டிவீட் செய்துள்ளார். 

17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) சார்பில் ஒரு வேட்பாளர்கூட முன்னிலை வகிக்கவில்லை. தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகி வருகிறது. இதிலும், அமமுகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரிக்கும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தோல்வி தினகரனுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் எழுந்து நிற்போம் என்று பதிவிட்டுள்ளார். டிவிட்டர் பதிவில் அவர் மேலும் தெரிவித்ததாவது,  

"மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்! நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது.

எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், இரவு- பகல் பார்க்காமல் உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும்,  கழகத்திற்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com