தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவு

பாஜக வேட்பாளர்கள் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. 
தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவு

பாஜக வேட்பாளர்கள் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. 

நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பாஜக கூட்டணி 347 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 

ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 மக்களவைத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 2 மக்களவைத் தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. 

இந்தியா முழுவதும் பாஜக முன்னிலை பெற்று வந்தாலும் தமிழகத்தில் அதற்கு நேர்மாறாக பாஜக, அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com