வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி?: தேர்தல் ஆணையம் விளக்கம்

வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி என்பது குறித்து  தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் புதன்கிழமை வெளியிட்ட தகவல்:


வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி என்பது குறித்து  தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் புதன்கிழமை வெளியிட்ட தகவல்:
வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும். அப்போது தபால் வாக்குகள் மின்னணு பரிமாற்றத்தின் மூலம் அந்த வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய நிலையில், ஏதேனும் ஒரு பேரவைத் தொகுதிக்கு உரிய வாக்கு எண்ணும் கூடத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
தபால் வாக்குகளுக்கான எண்ணிக்கை முடிந்த 30 நிமிஷங்களுக்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும். மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கூடங்களில் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்குத் துவங்கும்.   இடைத் தேர்தல் நடைபெற்ற 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணிக்கை 8 மணிக்குத் தொடங்கும். அதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை காலை 8.30 மணிக்குத் தொடங்கும்.
ஒப்புகை சீட்டுகள் எண்ணுதல்: ஒவ்வொரு சட்டப் பேரவைக்கும் ஒப்புகைச் சீட்டு எண்ணுவதற்கான 5 வாக்குச் சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்றின் போது குலுக்கல் முறையில் வாக்குச் சாவடி எண்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும். குலுக்கல் முறையில் தெரிவு செய்வது குறித்து வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com