சுடச்சுட

  

  கடந்த தேர்தலைவிட குறைவான வாக்கு சதவீதம்: அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு பின்னடைவு

  By DIN  |   Published on : 24th May 2019 04:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  admk-bjp


  17-வது மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் சரிவை கண்டுள்ளது.  

  17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்தியில் பாஜக 350 இடங்கள் வரை வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றபெற முடியவில்லை. மாறாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியே 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்த வெற்றி தமிழகத்தில் வெற்றி பெற்ற கட்சிகளின் வாக்கு சதவீதத்திலும் எதிரொலித்துள்ளது.

  இதன்மூலம் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாக்கு சதவீதம் கடந்த பொதுத் தேர்தலைக் காட்டிலும் இந்த முறை அதிகரித்துள்ளது. அதேசமயம் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் சரிந்துள்ளன. 

  அதிமுக, 2014 பொதுத் தேர்தலில் 44.92 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால், இந்த முறை 18.48 சதவீத வாக்குகளையே அதிமுக பெற்றுள்ளது. அதேசமயம், திமுகவின் வாக்கு வங்கி கடந்த தேர்தலை காட்டிலும் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.  

  கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்:

  கட்சி 2019 2014
  அதிமுக 18.48 சதவீதம்  44.92 சதவீதம்
  திமுக 32.76 சதவீதம் 23.91 சதவீதம்
  பாஜக 3.66 சதவீதம் 5.56 சதவீதம்
  காங்கிரஸ் 12.76 சதவீதம் 4.37 சதவீதம்
  தேமுதிக 2.19 சதவீதம்  5.19 சதவீதம்
  சிபிஐ 2.43 சதவீதம் 0.55 சதவீதம்
  சிபிஎம் 2.40 சதவீதம்  0.55 சதவீதம் 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai