தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து மக்களவைக்குத் தேர்வான 39 வெற்றியாளர்கள்

தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து மக்களவைக்குத் தேர்வான 39 வெற்றியாளர்கள் விவரம்..
தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து மக்களவைக்குத் தேர்வான 39 வெற்றியாளர்கள்

சமீபத்தில் நடைபெற்ற 17-வது மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. 1984-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில், வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 39 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.

இதில், 38 இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களும், 1 இடத்தில் அதிமுக வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.

வெற்றியாளர்களின் விவரம் பின்வருமாறு..

1. திருவள்ளூர் - கே. ஜெயக்குமார் - காங்கிரஸ்

2. வடசென்னை - கலாநிதி வீராசாமி - திமுக

3. தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் - திமுக

4. மத்தியசென்னை - தயாநிதி மாறன் - திமுக

5. ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர். பாலு - திமுக

6. காஞ்சிபுரம் - ஜி. செல்வம் - திமுக

7. அரக்கோணம் - எஸ். ஜெகத்ரட்சகன் - திமுக

8. வேலூர் - தேர்தல் ரத்து

9. கிருஷ்ணகிரி - ஏ. செல்லக்குமார் - காங்கிரஸ்

10. தருமபுரி - எஸ். செந்தில்குமார் - திமுக

11. திருவண்ணாமலை - சி.என். அண்ணாதுரை - திமுக

12. ஆரணி - எம்.கே. விஷ்ணுபிரசாத் - காங்கிரஸ்

13. விழுப்புரம் - து. ரவிக்குமார் - விசிக

14. கள்ளக்குறிச்சி - தெ. கௌதம் சிகாமணி - திமுக

15. சேலம் - எஸ்.ஆர். பார்த்திபன் - திமுக

16. நாமக்கல் - ஏ.கே. சின்ராஜ் - கொமதேக

17. ஈரோடு - அ. கணேசமூர்த்தி - மதிமுக

18. திருப்பூர் - சுப்புராயன் - இ.கம்யூனிஸ்ட்

19. நீலகிரி - ஆ. ராசா - திமுக

20. கோயம்புத்தூர் - பி.ஆர். நடராஜன் - மார்க்சிஸ்ட்

21. பொள்ளாச்சி - கு. சண்முகசுந்தரம் - திமுக

22. திண்டுக்கல் - ப. வேலுச்சாமி - திமுக

23. கரூர் - ஜோதிமணி - காங்கிரஸ்

24. திருச்சிராப்பள்ளி - சு. திருநாவுக்கரசர் - காங்கிரஸ்

25. பெரம்பலூர் - பாரிவேந்தர் - ஐஜேகே

26. கடலூர் - டி.ஆர்.பி.எஸ். ஸ்ரீரமேஷ் - திமுக

27. சிதம்பரம் - தொல். திருமாவளவன் - விசிக

28. மயிலாடுதுறை - செ. ராமலிங்கம் - திமுக

29. நாகப்பட்டினம் - செல்வராசு - இ.கம்யூனிஸ்ட்

30. தஞ்சாவூர் - எஸ்.எஸ். பழனிமாணிக்கம் - திமுக

31. சிவகங்கை - கார்த்தி சிதம்பரம் - காங்கிரஸ்

32. மதுரை - சு. வெங்கடேசன் - மார்க்சிஸ்ட்

33. தேனி - ப. ரவீந்திரநாத் குமார் - அதிமுக

34. விருதுநகர் - மாணிக் தாகூர் - காங்கிரஸ்

35. இராமநாதபுரம் - நவாஸ்கனி - முஸ்லிம் லீக்

36. தூத்துக்குடி - கனிமொழி - திமுக

37. தென்காசி - தனுஷ் எம். குமார் - திமுக

38. திருநெல்வேலி - சா. ஞானதிரவியம் - திமுக

39. கன்னியாகுமரி - ஹெச். வசந்தகுமார் - காங்கிரஸ்

40. புதுச்சேரி - வைத்திலிங்கம் - காங்கிரஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com