9 பேரவைத் தொகுதிகளில் அதிமுக வெற்றி: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
9 பேரவைத் தொகுதிகளில் அதிமுக வெற்றி: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஆம்பூர், ஆண்டிப்பட்டி, அரவக்குறிச்சி, குடியாத்தம், அரூர், ஓசூர், மானாமதுரை, நிலக்கோட்டை, ஓட்டப்பிடாரம், பாப்பிரெட்டிபட்டி,  பரமக்குடி, பெரம்பூர், பெரியகுளம், பூந்தமல்லி, சாத்தூர், சோளிங்கர், சூலூர், தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர், திருவாரூர், விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 23) எண்ணப்பட்டன. அதில் 9 தொகுதிகளில் ஆளும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. 

இதுகுறித்து தேமுதிக விஜயகாந்த் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைதேர்தலில் 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், வேட்பாளர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த பாராளுமன்ற தேர்தலிலும், சட்டப்பேரவைத் இடைத்தேர்தலிலும் அயராது பாடுபட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், நமது தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

மீண்டும் மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் என்றும் தேமுதிக தொடர்ந்து ஈடுபட்டு அயராது பணியாற்றும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com