சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே விரைவு மின்சார ரயில் சேவை மீண்டும் தொடக்கம்! 

எதிர்வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே விரைவு மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே விரைவு மின்சார ரயில் சேவை மீண்டும் தொடக்கம்! 

சென்னை: எதிர்வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே விரைவு மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த  ஆண்டு ஜூலை 24ஆம் தேதி கடற்கரையிலிருந்து திருமால்பூர் சென்ற மின்சார விரைவு ரயில், பரங்கிமலையில் விபத்துக்குளாகி பயணிகள் 5 பேர் தடுப்புக்கட்டைகளில் மோதி பலியாகினர் 

அன்று முதல் அந்த தண்டவாளத்தில் ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு, ரயில் நிலைய நடைமேடை மற்றும் தண்டவாளத்தை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்றன.

விரைவு மின் ரயில் சேவையை மீண்டும் தொடர வேண்டுமென பயணிகள் கோரிக்கை  விடுத்து வந்தனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே விரைவு மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக தென்னக ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரும் ஜூன் 1 முதல், செங்கல்பட்டிலிருந்து காலை 7.50 மணிக்கு, சென்னை கடற்கரைக்கு விரைவு மின் ரயில் சேவை தொடங்கும். 

சென்னை கடற்கரையிலிருந்து - திருமால்பூர்க்கு மாலை 6.15 மணிக்கு விரைவு மின் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com