அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்கு சதவீதம் உணர்த்துவது என்ன?

17-வது மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்பட்டு வந்தது.
அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்கு சதவீதம் உணர்த்துவது என்ன?


17-வது மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்பட்டு வந்தது. காரணம், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா எனும் இரண்டு பெரிய தலைவர்கள் இல்லாமல் தமிழகம் எதிர்கொள்ளும் முதல் பொதுத் தேர்தல். 

அதனால், இந்த பக்கம் தனது தலைமையை நிரூபிக்க மு.க. ஸ்டாலினும், இந்த பக்கம் ஆட்சியை தக்கவைக்க எடப்பாடி கே.பழனிசாமியும் கடுமையான உழைத்தனர். இதில், திமுக தலைவர் ஸ்டாலின் 38 தொகுதிகளில் வெற்றி பெற்று தனது தலைமையை நிரூபித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க முடியவில்லை, 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தலில் 22 தொகுதியிலும் வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என ஒரு சில சிறிய தோல்விகள் இருந்தாலும், அதிமுக வசம் இருந்த 37 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளை திமுக அடைந்துள்ளது.   

அதேசமயம் மக்களவைத் தேர்தலில் 37 மக்களவைத் தொகுதிகளை இழந்தபோதிலும், இடைத்தேர்தலில் அதிமுக 9 தொகுதிகளை பெற்றுள்ளது. இதன்மூலம் முதல்வர் பழனிசாமியும் மக்களவையில் தோல்வியடைந்திருந்தாலும், சட்டப்பேரவையில் ஆட்சியை தொடருவதற்கான பெரும்பான்மையை பெற்றுவிட்டார்.    

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனது மகனை தேனி தொகுதியில் வெற்றி பெறச் செய்து மக்களவைக்கு அனுப்பிவிட்டார். அதிமுக கூட்டணி சார்பில் தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வாகியுள்ள ஒரே ஒரு உறுப்பினர் இவர் மட்டும் தான்.

இவற்றை கடந்து முக்கியமாக எதிர்பார்க்கப்பட்டது அதிமுக வாக்குகளை டிடிவி தினகரன் பிரிப்பாரா மற்றும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் மாற்று சக்தியாக உருவெடுக்குமா என்பது தான்.

இதில், டிடிவி தினகரனின் அமமுக அதிமுகவின் வாக்குகளை பிரிக்கவில்லை. எனினும், அவர் அனைத்து தொகுதியிலும் கணிசமான வாக்குகளை பெற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கியுள்ளார். 

அதேபோல், நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளும் தங்களது முதல் பொதுத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த மூன்று கட்சிகளும் எந்த தொகுதியிலும் வெற்றி பெறாவிடிலும், சொல்லிக்கொள்ளும்படியான வாக்குகளை பெற்றுள்ளனர்.  

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை சென்னையை தவிர்த்து மேற்கு மாவட்டங்கள், வட மாவட்டங்கள், தெற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என்று 4 பகுதிகளாக பிரித்து, இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் வாங்கியுள்ள வாக்கு சதவீதம் கவனிக்கத்தக்கதாக உள்ளது. 

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் பொறுத்தவரை டிடிவி தினகரன் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். இதில், அனைத்து தொகுதியிலும் டிடிவி தினகரன் வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இங்கு நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் வாக்கு சதவீதத்தோடு ஒப்பிடுகையில் அமமுக அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. 

மக்கள் நீதி மய்யத்துக்கு தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரிதான வரவேற்பு இல்லை. எனினும், கொங்கு மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் நல்ல கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக கோவை தொகுதியில் மநீம வேட்பாளர் மகேந்திரன் 11.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். 

நாம் தமிழரை பொறுத்தவரை ஒரு இடத்தில் ஏற்றமும், மற்றொரு இடத்தில் இறக்கமும் அல்லாமல், அனைத்து தொகுதியிலும் சரிசமமாக கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி கூடுதல் ஆதரவை பெறுகிறது.

தென் மாவட்டங்களில் பெற்ற வாக்கு சதவீதம்:

தொகுதிஅமமுகநாதகமநீம
சிவகங்கை11.3%6.66%2.11 %
மதுரை8.44% 4.22%8.37%
தேனி12.28%2.37 %1.44%
விருதுநகர்10%4.94%5.32%
ராமநாதபுரம்13.3%4.35%1.4%
தூத்துக்குடி7.75%4.7%2.59%
தென்காசி8.64%5.58%2.25%
திருநெல்வேலி5.98%4.8 %2.22%
கன்னியாகுமரி1.18%1.63%0.82%


மேற்கு மாவட்டங்களில் பெற்ற வாக்கு சதவீதம்:

தொகுதிஅமமுகநாதகமநீம
சேலம்4.17%2.67% 4.67%
நாமக்கல்2.06 %3.4%2.73%
ஈரோடு2.42 %3.65%4.47%
திருப்பூர்3.91%3.77%5.78%
நீலகரி4%4.07%
கோவை 3.04%4.84%11.6%
பொள்ளாச்சி2.46 % 2.91%5.52%
திண்டுக்கல்5.42% 4.74%3.34%
கரூர்2.82%3.49%1.45%


டெல்டா மாவட்டங்களில் பெற்ற வாக்கு சதவீதம்:

தொகுதிஅமமுகநாதகமநீம
திருச்சி9.62%6.23% 4.02%
மயிலாடுதுறை6.24%3.74%1.55%
நாகப்பட்டினம்7.02% 5.13 %1.45%
தஞ்சாவூர்9.71%5.47%2.22%


வட மாவட்டங்களில் பெற்ற வாக்கு சதவீதம்:

தொகுதிஅமமுகநாதகமநீம
கள்ளக்குறிச்சி4.17%2.51%1.21%
பெரம்பலூர்4.13 %4.86 %-
சிதம்பரம்5.4%3.25%1.33%
கடலூர்4.3%3.33%2.27%
விழுப்புரம்5.11%2.17%1.58%
ஆரணி4.05%2.83%1.29%
திருவண்ணாமலை3.35%2.39%1.27%
தருமபுரி4.39%1.61%1.28%
கிருஷ்ணகிரி2.41%1.46%
அரக்கோணம்5.67%2.49%2.02%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com