தமிழக சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற 22 வெற்றியாளர்கள்!

தமிழக சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள்.
தமிழக சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற 22 வெற்றியாளர்கள்!

தமிழக சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு இருந்த ஆபத்து நீங்கி அவரது ஆட்சி தொடருகிறது.

இத்தேர்தல் முடிவையடுத்து, அதிமுகவுக்கு 122, திமுகவுக்கு 101, காங்கிரஸுக்கு 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேட்சை, பேரவைத் தலைவர் தலா 1 தொகுதிகளும் உள்ளனர்.

இடைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு..

1. குடியாத்தம் - எஸ். காத்தவராயன் - திமுக

2. ஆம்பூர் - அ.செ. வில்வநாதன் - திமுக

3. சோளிங்கர் - கோ. சம்பத் - அதிமுக

4. திருப்பரங்குன்றம் - பா. சரவணன் - திமுக

5. திருப்போரூர் - இதயவர்மன் - திமுக

6. சாத்தூர் - எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் - அதிமுக

7. நிலக்கோட்டை - எஸ். தேன்மொழி - அதிமுக

8. தஞ்சாவூர் - டி.கே.ஜி. நீலமேகம் - திமுக

9. அரவக்குறிச்சி - வி. செந்தில்பாலாஜி - திமுக

10. சூலூர் - வி.பி. கந்தசாமி - அதிமுக

11. பாப்பிரெட்டிப்பட்டி - கோவிந்தசாமி - அதிமுக

12. ஒசூர் - எஸ்.ஏ. சத்யா - திமுக

13. அரூர் - வே. சம்பத்குமார் - அதிமுக

14. பூவிருந்தவல்லி - ஆ. கிருஷ்ணசாமி - திமுக

15. விளாத்திகுளம் - பி. சின்னப்பன் - அதிமுக

16. பரமக்குடி - என். சதர்ன் பிரபாகர் - அதிமுக

17. மானாமதுரை - எஸ். நாகராஜன் - அதிமுக

18. திருவாரூர் - பூண்டி கே. கலைவாணன் - திமுக

19. பெரம்பூர் - ஆர்.டி. சேகர் - திமுக

20. ஓட்டப்பிடாரம் - எம்.சி. சண்முகையா - திமுக

21. ஆண்டிபட்டி - மகாராசன் - திமுக

22. பெரியகுளம் - கே.எஸ். சரவணக்குமார் - திமுக

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com