சுடச்சுட

    

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் கார் விபத்தில் பலி

    By DIN  |   Published on : 25th May 2019 05:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    road_accident


    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரும், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞருமான சையத் இப்ராஹீம்(56) இன்று நாமக்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். 

    கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டு தனது காரில், கரூா் நோக்கி நாமக்கல்-கரூா் தேசிய நெடுஞ்சாலையில், நல்லிபாளையம் புறவழிச்சாலையில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வழக்குரைஞர் சையத் இப்ராஹீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயத்துடன் உயிர் தப்பிய கார் ஓட்டுநர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    விபத்தில் உயிரிழந்த வழக்குரைஞருக்கு பாத்திமா என்ற மனைவியும், மகிமா என்ற மகளும், முகம்மதுதமீம்அன்சாரி என்ற மகனும் உள்ளனர். 

    இந்த விபத்து தொடா்பாக நல்லிபாளையம் காவல் ஆய்வாளர் ரத்னகுமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai